ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மின்சார கண்ணா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மோனிகா தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? புகைப்படம்!
தமிழ் சினிமாவின் தளபதியாக திகழ்கிறார் நடிகர் விஜய். தமிழ் மட்டும் இல்லாது இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் விஜய்யும் ஒருவர். தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் விஜய். விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்து பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றிபெற்றிருந்தாலும் ஒருசில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதுபோன்ற படங்களில் ஒன்றுதான் KS ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் முதன் முதலில் நடித்த மின்சார கண்ணா திரைப்படம். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரம்பா மற்றும் மோனிகா காஸ்ட்லினோ நடித்திருந்தனர். முக்கியமான கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்திருந்தார்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக, குஷ்புவுக்கு தங்கையாக நடித்தவர்தான் மோனிகா காஸ்ட்லினோ. மின்சார கண்ணா படத்திற்கு பின் இவர் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்த இவர் அங்கும் வெற்றி பெற வில்லை.
துணை இயக்குனர் சத்ய பிரகாஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் நீண்ட வருடங்கள் கழித்து தற்போது பொது நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள தொடங்கியுள்ளார். ரசிகர்கள் இவரை இப்படி மாறிட்டார் என்று கூறுகின்றனர்.