மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் பரத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல்! ரசிகர்களை மிரளவைத்த படக்குழு.! புகைப்படம் இதோ!!
தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இதனை தொடர்ந்து அவர் விஷால் நடிப்பில் வெளிவந்த ‘செல்லமே’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்று பெருமளவில் பிரபலமானார். பின்னர் பரத் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
இந்த நிலையில் நடிகர் பரத் ஒரு அறிமுக இயக்குனர் எம் சக்திவேல் இயக்கத்தில் மிரள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, நரேன் பாலாஜி, அங்கித், சாந்தனு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
#SecondLook of the slasher thriller #MIRAL is here to haunt you all!#HBDBharath@AxessFilm @Dili_AFF @SakthiFilmFctry @sakthivelan_b @bharathhere @vanibhojanoffl @ksravikumardir @nameissakthi @itspooranesh @Sethu_Cine @rajNKPK @kaavya_arivu23 @Sureshbaladop pic.twitter.com/VhABlrfRXa
— Axess film factory (@AxessFilm) July 21, 2022
ஆக்செஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைத்துள்ளார். க்ரைம் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் பரத் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த நிலையில் பிறந்த நாளையொட்டி மிரள் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்து வருகிறது.