திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடிதடியில் முடிந்த பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டி! டென்ஷனான பிரபலங்கள்.! என்ன நடந்தது?? வெளிவந்த தகவல்!!
முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து இன்று வரை வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனையும் படைத்து வருகிறது. இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அண்மையில் பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டி நடைபெற்றுள்ளது. அதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த சக்சஸ் பார்ட்டி முடியும் தருவாயில் அடிதடி ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது லைக்கா நிறுவன நபர் ஒருவர் மணிரத்தினத்தின் பெண் உதவி இயக்குனர் ஒருவரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும், அதனால் அங்கிருந்தவர்கள் அவரை அடித்து வெளியே அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதனால் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பல பிரபலங்களுக்கும் மன வருத்தம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.