பிரபல பின்னணி பாடகி மறைவு.! கடும் வேதனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட உருக்கமான பதிவு.!



mk stalin tweet about Latha mangeshkar death

இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 92 வயதில் காலமானார். 

பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய லதா மங்கேஷ்கர் தமிழில் வளையோசை, ஆராரோ ஆராரோ,  எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உட்பட  பல்வேறு பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார். பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்தநிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

எட்டு தசாப்தங்கள் நீடித்த ஒரு வாழ்க்கையுடன், அவர் பல்வேறு மொழிகளில் தனது மெலிதான குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்". என குறிப்பிட்டுள்ளார்.