மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தியேட்டரில் படம் பார்த்த மு.க ஸ்டாலின். படத்திற்கு செம பாராட்டு, என்ன படம் தெரியுமா?
நீண்ட இடைவெளிக்கு பிறகு தியேட்டருக்கு சென்று படம் பார்த்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அப்பட குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இடையே திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் சென்று படம் பார்த்தார். பரியேறும் பெருமாள் படத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் தமிழகத்தில் நிலவி வருவதால் அப்படத்தை தானும் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றார்.
படத்தை பார்த்த மு.க ஸ்டாலின் அப்படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தையும் அறிமுக இயக்குனர் மாரி. செல்வராஜெயும் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதன் பிறகு படத்தை பற்றி அவர் கூறுகையில், சமூக அழுகை அகற்ற பல பரியன்கள் தமிழ் சமூகத்திற்கு இன்னும் தேவை என்று கூறினார்.
‘பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். @beemji தயாரிப்பில் அறிமுக இயக்குநரான @mari_selvaraj படத்தை மறக்க முடியாது. சமூக அழுக்கை அகற்ற இன்னும் பல ‘பரியன்கள்’ தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும்! pic.twitter.com/DQb7MpFhGZ
— M.K.Stalin (@mkstalin) October 6, 2018