கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
கருப்பன் குசும்புக்காரன் புகழ் நடிகர் தவசிக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திமுக எம்.எல்.ஏ.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!
வருத்தப்பாடாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் நடிகர் தவசி. அந்த படத்தில் அவர் பேசிய 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, படம் பார்க்கும்போது ரசிகர்களை சிரிக்கவும் வைத்தது. மேலும் பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்தவர் தவசி. தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர், மக்களிடத்தில் உதவி கோரிய வீடியோ சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நகைச்சுவை நடிகர் அவசி அவர்களுக்கு திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சரவணனின் ’சரவணா’ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டோம் எனவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் #Thavasi அவர்களுக்கு எங்களது மருத்துவமனையில் உணவுக்குழாயில் (Oesophageal stent) பொறுத்தியுள்ளோம்.
— Dr.P.Saravanan MD.,MLA (@mdr_saravanan) November 16, 2020
புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டோம். pic.twitter.com/sL4B5ZE8SE
இதுகுறித்து டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், "நகைச்சுவை நடிகர் தவசி அவர்களுக்கு எங்களது மருத்துவமனையில் உணவுக்குழாயில் (Oesophageal stent) பொறுத்தியுள்ளோம். புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ அவர்களை, "நீங்கள் ஆற்றிவரும் மருத்துவ சேவையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நோயாளிகளை கட்டணமில்லா மருத்துவ சேவை மூலமாக காப்பாற்றியும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தும் வருகிறீர்கள். இல்லாதவர்களுக்கு தாங்கள் உதவும் இந்த அற்புத செயலை மேலும் பல நூற்றாண்டுகள் தொடர வேண்டும் என பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.