குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் - பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.!
துப்பாக்கி முனையில்., 8 மாடல் அழகிகள் கதறக்கதற கற்பழிப்பு.. படப்பிடிப்பு தளத்தில் பகீர்..!!
தென் ஆப்பிரிக்காவில் உள்ள மேற்கு சிறிய நகரமான புரோகர்ஸ்டோபின் புறநகர் பகுதியில் மியூசிக் ஆல்பத்திற்கான வீடியோ படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த படப்பிடிப்பில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் அப்பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த 8 பெண் மாடல்களை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்களை தாக்கிய அந்த கும்பல் அங்கிருந்த பொருட்களையும் சரமாரியாக அடித்து நொறுக்கியது.
மேலும் ஆண்களை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவமானது தென்னாப்பிரிக்க நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அந்நாட்ட அதிபர் குற்றவாளிகளை விரைவில் பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் சந்தேகத்தின் பெயரில் 20 பேரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் பல நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் கனிம வளங்களை கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.