லாக்டவுனில் ஆன்லைனில் வகுப்புகள்! நடிகர் மோகன்லால் செய்த காரியத்தால் செம குஷியில் மாணவர்கள்!



mohan-lal-take-online-class-for-kerala-students

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவி, நாளுக்கு நாள் அதிகரித்து கோரதாண்டவமாடி வருகிறது.  இத்தகைய கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு,  கல்வி நிலையங்கள் அனைத்தும் சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலம் கருதி, பல மாநிலங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கேரள கல்வித்துறை சார்பில் விக்டர்ஸ்  என்ற பெயரில் கல்வி சேனல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த சேனலுக்கு இணையதளமும் உள்ளது.

mohanlal

இந்நிலையில் கேரளாவில் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவ்வப்போது சினிமா நட்சத்திரங்களும் வகுப்புகளை எடுத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து பிரபல நடிகர் மோகன் லால் நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். அப்பொழுது அவர் தனது சினிமா அனுபவங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.