மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாவை தொடர்ந்து மகனுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!! யார் அந்த பிரபல நடிகர் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, விஷால், தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த நடிகையர் திலகம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
மேலும் தமிழில் சர்க்கார் படத்திற்குப்பிறகு எந்த படத்திலும் கம்மிட்டாகாத கீர்த்தி சுரேஷ் தற்போது போனி கபூர் தயாரிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது மலையாளத்தில்,மோகன்லால் நடிக்கும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகின்ற வரலாற்று படமான மரக்கார் அராபிகளிண்டே சிம்ஹம் என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும்பொழுதே கீர்த்தி சுரேஷ் மோகன்லாலின் மகனான பிரனவ் மோகன்லாலுடனும் இணைந்து புதிய படத்தில் நடிக்கஉள்ளார்.இப்படத்தை வினீத் சீனிவாசன் இயக்கவுள்ளார்.