மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித் போன்று அதிரடி அறிக்கை வெளியிட்ட பிரபல நடிகர்! யார் அந்த நடிகர் தெரியுமா?
பொது தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அரசியல் வட்டாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஒருசில அஜித் ரசிகர்கள் பாஜக வில் இணைந்ததை அடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அஜித் ரசிகர்களுக்கு அழைப்புவிடுத்தார். அஜித் ரசிகர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து தமிழத்தில் தாமரையை மலர செய்யவேண்டும் என கூறினார்.
இதனை அடுத்து தனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கினர் அஜித். தற்போது இதேபோன்று ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
தமிழ், மலையாளம், தெழுங்கு என பிரபலமானவர் நடிகர் மோகன்லால். இவர் பாஜகவில் சேர்ந்துவிட்டதாகவும், விரைவில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடப்போவதாகும் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை, பாஜக உட்பட எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்று அஜித் பாணியில் அறிக்கை வெளியிட்டுள்ளார் மோகன்லால்.