மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படக்குழுவினர் கொடுத்த கோலாகல வரவேற்பு!! செம ஹேப்பியில் ஜாங்கிரி மதுமிதா! ஏன் தெரியுமா??
கலைமாமணி விருது பெற்ற நடிகை மதுமிதாவிற்கு படக்குழுவினர் கோலாகலமாக வரவேற்பு கொடுத்து கௌரவித்துள்ளனர்.
தமிழ்சினிமாவில் உதயநிதி ஸ்டாலின், சந்தானம் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற கலகலப்பான திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இத்திரைப்படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நடிகை மதுமிதா. அதனைத் தொடர்ந்து மதுமிதா ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் அவருக்கு அதிகளவு வரவேற்புகள் கிடைத்த நிலையில், நாளடைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் வாக்குவாதத்தின் காரணமாக அவர் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்தார். மேலும் அதனால் அவர் பாதியிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டும் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் மதுமிதாவுக்கு அண்மையில் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை பெருமைப்படுத்தும் வகையில் நடிகர் அபிசரவணன் மற்றும் கும்பாரி படக்குழுவினர் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடி கவுரவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.