"ஒரு நாளைக்கு முப்பது முதல் நாற்பது ஆண்கள் வருவார்கள்" மிருணாள் தாகூர் வேதனை.!



Mrunaal thakur Controversy interview

கடந்த 2012ம் ஆண்டு ஹிந்தி சீரியல் மூலம் நடிப்புத்துறைக்கு வந்தவர் மிருணாள் தாகூர். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் "ராத்தி" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துல்கர் சல்மானுடன் இவர் நடித்த "சீதா ராமம்" திரைப்படம் மூலம் இவர் மிகப் பிரபலமடைந்தார்.

Mrunaal

2018ஆம் ஆண்டு இயக்குனர் சோனியா குப்தா பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை விவரிக்கும் விதமாக "லவ் சோனியா" என்ற படத்தை எடுத்து, அதில் மிருணாள் தாகூரை அறிமுகம் செய்தார். அதற்காக மிருணாள் தாகூர், பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார்.

அதன் மூலம் அவர்களின் தினசரி வாழ்க்கை முறை, துயரங்கள், அவர்கள் நடந்து கொள்ளும் விதம் என்று அனைத்தையும் கவனித்து தெரிந்துகொண்ட பிறகே படத்தில் நடித்தார். இது பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறினார், " தங்களை யாரும் காப்பாற்ற வரப்போவதில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

Mrunaal

அவர்கள் விருப்பப்பட்டு தான் இத்தொழிலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 30-40 ஆண்கள் வருவார்கள். இவர்களுக்கு எந்த உணர்ச்சிகளும் இருப்பதில்லை. மாதவிடாய் காலங்களிலும் இது தொடரும். குழந்தைகளை கட்டிலுக்கு கீழ் படுக்கவைத்துவிட்டு தான் அவர்கள் இத்தொழிலில் இருக்கிறார்கள்" என்று கூறினார்.