மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எந்த ஒரு பிக்பாஸ் வெற்றியாளர்களுக்கு கிடைக்காத பெருமை! முகெனுக்கு கிடைத்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி முதல் இடம் பிடித்தார். சாண்டி இரண்டாவது இடத்தையும், லாஷ்லியா மற்றும் ஷெரின் மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்த பிரபலங்கள் தற்போது தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். சமீபத்தில் முகேன் மலேசியா சென்றதும் அங்கு அவருக்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் மலேசியா சென்றுள்ள முகேன் அந்த நாட்டின் துணை பிரதமரை சந்தித்து அவரிடம் வாழ்த்துக்களை பெற்றுள்ளார். பிரதமரை சந்தித்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் முகேன்.