மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதெல்லாம் பொய்! கார் டிரைவருடன் ஏற்பட்ட பெரும் பஞ்சாயத்து! போலீசில் புகாரளித்த கவர்ச்சி நடிகை!
தென்னிந்திய சினிமாவுலகில் பெரும் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் முமைத் கான். 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இவர் கமல், விஜய், அஜித் மற்றும் விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஒற்றை கவர்ச்சிப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ராஜு என்ற கார் டிரைவர் முமைத்கான் மூன்று நாள் பயணமாக கோவா செல்ல தன்னிடம் கார் புக் செய்ததாகவும், ஆனால் அங்கு 8 நாட்கள் தங்கிவிட்டு தனக்கு கொடுக்கவேண்டிய ரூ.15000 பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் எனவும் குற்றம்சாட்டியிருந்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் முமைத் கான் தான் டிரைவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தபிறகும் அவர் என்மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி அவதூறு பரப்புகிறார் போலீசில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளனர்