மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமானத்தில் வாரிசு பட 'வைப்'... சூரியகுமார் யாதவ் செய்த செயல்... வைரலான புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் டாப் 3 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக அதிகமான ரசிகர்களின் விருப்பமான கதாநாயகனாக இருப்பவர் இவர் தான். பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்களுக்குமே விருப்பமான கதாநாயகனாக இருப்பவர்.
தற்போது லியோ திரைப்படப்பிடிப்பில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தினை வெங்கட் பிரபு இயக்குகிறார். முதல்முறையாக யுவன், வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் திரைப்படம் உருவாக இருப்பதால் ரசிகர்களிடம் இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் தளபதியின் விஜய் படத்தை பார்த்ததாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. தளபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் வாரிசு. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் சென்னையிலிருந்து அகமதாபாத் சென்ற விமானத்தில் பயண நேரத்தின் போது தளபதி விஜயின் வாரிசு படத்தை பார்த்ததாக மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த செய்தியும் புகைப்படமும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.