திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பல டாப் பிரபலங்களை தொடர்ந்து கோல்டன் விசா பெற்றுள்ள முன்னணி இசையமைப்பாளர்.! யார்னு பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!
ஐக்கிய அரபு நாடுகள் பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களை கெளரவிக்கும் வகையில்,10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தது. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாகவே கருதப்படுவர். அங்கு அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்.
அந்த வகையில் இந்திய சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. ஷாருக்கான், மம்மூட்டி, சஞ்சய் தத், மோகன்லால், பிரித்விராஜ், சரத்குமார், பார்த்திபன், விஜய் சேதுபதி, திரிஷா,அமலா பால், பிரணிதா, மீனா, ஆண்ட்ரியா, கமல், விக்ரம் என பல பிரபலங்களும் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
அவர்களைத் தொடர்ந்து தற்போது திரையுலகில் பல சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜாவிற்கு ஐக்கிய அமீரகத்தின் சார்பில் கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.