#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படம் அக்.6-ல் வெளியீடு: படக்குழு அறிவிப்பு.!
இயக்குனர் எம்.எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில், கிரிக்கட்டர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை கருவாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 800.
விஜய் சேதுபதி முதலில் இத்திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவிருந்த நிலையில், அப்போது எழுந்த சர்ச்சையின் காரணமாக அவர் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மதுர் மிட்டல் - மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்து திரைப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார்.
இந்நிலையில், இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 06ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
விதியை எதிர்த்து வென்றவர் 🛡️
— Movie Train Motion Pictures (@MovieTrainMP) October 1, 2023
உலகமெங்கும் அக்டோபர் 6 முதல் 🎥 #800FromOct6 #MuthiahMuralidaran #MSSripathy #MadhurrMittal #Biopic @Murali_800 @GhibranVaibodha @Mahima_Nambiar @RDRajasekar @Cinemainmygenes @VivekRangachari @dirpitchumani @sampathdft @SakthiFilmFctry… pic.twitter.com/3OUstxArzR