மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவில் நடுரோட்டில் மைனா நந்தினி செய்த காரியத்தை பார்த்தீங்களா.! தீயாய் பரவும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக திகழ்ந்து வருபவர் நந்தினி. இவர் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து அனைவராலும் அவர் மைனா நந்தினி என்றே அழைக்கப்பட்டார்.
பின்னர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த அவர் வெள்ளித்திரையிலும் களமிறங்கி முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பிரபல சீரியல் நடிகர் லோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மேலும் லோகேஷ், நந்தினி இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டு அசத்தியுள்ளனர்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி அவ்வப்போது தனது போட்டோ ஷூட் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் அவர் நள்ளிரவில் நடுரோட்டில் ஜாலியாக ரீல்ஸ் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.
#MynaNandhini Atrocities 😂😂😂😂 pic.twitter.com/pQUJWN57Op
— chettyrajubhai (@chettyrajubhai) May 9, 2022