திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிம்புவ வச்சு படம் பண்ணலான்னு பாத்தா., ஆப்பு வச்சிட்டான்.. டிரெய்லர் வெளீயீட்டு விழாவில் கடுப்பான பிரபல இயக்குனர்..!!
"பேப்பர் ராக்கெட்" டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மிர்ச்சி சிவா கலாய்த்ததால், இயக்குனர் மிஷ்கின் செல்லமாக கோபித்துக்கொண்டதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
அரசியல்வாதி, நடிகர், தயாரிப்பாளர் என மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் உதயநிதி. இவரது மனைவியும், இயக்குனருமான கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தொடரான "பேப்பர் ராக்கெட்" சீரிஸின் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இதில் இயக்குனர் மிஷ்கின், சிம்பு, மிர்ச்சி சிவா, இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மிர்ச்சி சிவா அதில் பேசிய போது, வழக்கம் போல காமெடியாக பேச்சை தொடங்கியுள்ளார். அப்போது 'சிம்பு சாருக்கு அடுத்த படத்தில் ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள். சிம்புவும், நானும் நடிக்கிறோம்' என்று விளையாட்டாக கிருத்திகாவை கலாய்த்துள்ளார்.
இதற்கு சிம்புவும் சிரித்துக் கொண்டே தலையசைத்ததால், சிவா 'திரும்பி பாத்தீங்களா? சிம்புவிடம் கால்ஷீட் வாங்கி கொடுத்து விட்டேன்' என்று இயக்குனர் கிருத்திகாவை மீண்டும் கலாய்த்து விட்டு தனது பேச்சை முடித்தார். பின்னர் பேச தொடங்கிய மிஷ்கின், 'நான் சிம்பு வைத்து படம் பண்ணலாம் என்று நினைத்திருந்தேன், அதற்கு பய ஆப்பு வச்சிட்டு போயிட்டான்' என்று செல்லமாய் கோபித்தார்.
ஆனால், உண்மையில் இயக்குனர் மிஷ்கின் சிம்புவுக்கு கதை கூறி ஓகே வாங்கி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அப்போது வெளியான தகவலின் படி, இயக்குனர் மிஷ்கின் கூறிய கதையானது போலீஸ் கதைக்களம் கொண்டது. அதில் வில்லனாக இதுவரை யாரும் எதிர்பாரா நடிகரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று எண்ணி, வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது .விரைவில் இயக்குனர் மிஷ்கின் மற்றும் சிம்பு இணையும் தருணம் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.