திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த நடிகையின் வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க ஆசைப்படுகிறேன் - மிஷ்கின்!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகள் மூலம் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கிய வருபவர் மிஷ்கின். தற்போது அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இதனிடையே அவர் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
அதன்படி டெவில் என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், மிஷ்கின், நடிகை பூர்ணா மற்றும் சக நடிகர்களும் கலந்து கொண்டனர்.
இதில், நடிகை பூர்ணா குறித்து இயக்குனர் மிஸ்டின் பேசியது பெரும் சர்ச்சையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது, என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒருவர் பூர்ணா தான். நான் அவளுடைய வயிற்றில் குழந்தையாக பிறக்க ஆசைப்படுகிறேன்.
ஏனென்றால் என்னை ஒரு தாய் போல பூர்ணா பார்த்துக் கொள்வார். தன்னுடைய வாழ்நாள் இருக்கும் வரை சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. மேலும் என்னுடைய திரைப்படங்களில் எப்போதுமே பூர்ணா நடிப்பார் என மிஷ்கின் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மிஷ்கின் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.