#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. நம்ம வைகை புயலின் கெட்டப் வேறலெவல் ! கசிந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்! கூட யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி காமெடி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. மேலும் இவர் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பல தடைகளைத் தாண்டி வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அவர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், குக் வித் கோமாளி சிவாங்கி, ரெடிங் கிங்ஸ்லி, நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தில் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி ஆகியோர் வைகைப்புயல் வடிவேலுவுடன் உள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.