#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகளா - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்!
1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர். இவரது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கினர் நடிகை ரோஜா.
ரஜினி, கார்த்திக், பிரபு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ள ரோஜா 90 இல் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருந்தவர். இந்நிலையில் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் ஆர்.கே செல்வமணியை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
பள்ளிப்படிப்பை முடித்ததும் நடிகை ரோஜாவின் மகள் அம்மாவைப் போலவே நடிக்க வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.