மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்... செம கூலாக நாக சைத்தன்யா என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
தெலுங்கு சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் சில மாதங்களுக்கு முன்பு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது இருவரும் தங்களது வேலையில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவிடம் இருவரையும் ஒரே அறையில் அடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அங்கு கூர்மையான பொருள் இருக்க கூடாது என்றார்.
அண்மையில் நாக சைத்தன்யாவிடம் ஒரு பேட்டியில் சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள் என கேட்க அதற்கு அவர், அவருக்கு ஹாய் சொல்வேன், கட்டிப் பிடிப்பேன் என கூலாக பதில் கூறியுள்ளார்.