மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம்.. அதைப்பத்தி யாரும் பேசாதீங்க.! டென்ஷனான நாக சைதன்யா.! ஏன்??
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தெலுங்கு நடிகரும் பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜூனாவின் மகனுமான நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் அழகிய நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் நான்கு வருட வாழ்க்கைக்கு பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரவர் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமந்தா விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்தார். பின் அவரது நடிப்பில் குஷி, யசோதா, சாகுந்தலம் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் அண்மையில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தாவிடம் விவாகரத்து குறித்து கேட்டபோது சமந்தா, திருமண வாழ்க்கையில் இணக்கமான சூழலில்லையென்றால் பிரிவதை விட வேறு வழியில்லை. முதலில் கடினமாக இருந்தது. பின் தற்போது மிகவும் வலிமையானவளாக உள்ளேன் என கூறினார்.
சமீபத்தில் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட நாகசைதன்யா சமந்தா குறித்த கேள்விக்கு ‛‛நாங்கள் இருவரும் என்ன சொல்ல விரும்புகிறோமோ அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுவிட்டோம். இப்போது இருவருமே அவரவர் பாதையில் சென்று கொண்டுள்ளோம். அதனால் மீண்டும் பழைய வாழ்க்கை குறித்து பேசி தனிப்பட்ட வாழ்க்கையை தலைப்புச் செய்தியாக்க நான் விரும்பவில்லை என முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.