மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓ.. சமந்தாவை பிரிவிற்கு இதுதான் காரணமோ! நாக சைதன்யா என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நட்சத்திர தம்பதிகளாக விளங்கி வந்த இருவரும் திடீரென விவாகரத்து பெற்று பிரியப் போவதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் பிரிவிற்கு காரணம் சமந்தாவின் தவறான உறவு, கருக்கலைப்பு என அவரை குறித்து பல அவதூறான கருத்துக்கள் பரவி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து சமந்தா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால் இதுகுறித்து நாக சைதன்யா எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார். இந்த நிலையில் தற்போது படங்களில் கதாபாத்திரங்களை தேர்வு செய்வது குறித்து பதிலளித்த நாக சைதன்யாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர்,
நான் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தேர்வு செய்யும் போது அது எனது குடும்பத்தையும், எங்களது கெளரவத்தையும் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். எனது குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் வேடங்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருமணத்துக்கு பிறகு சமந்தா கவர்ச்சியாக நடிப்பது, சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடிப்பது என இருந்தார். இதனாலே நாகசைதன்யாவிற்கும், சமந்தாவிற்கும் தகராறு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.