மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமந்தாவை விவாகரத்து செய்ததற்கு பிறகு, எனக்கு இதெல்லாம்தான் நடந்துச்சு.! முதன்முறையாக மனம் திறந்து பேசிய நாக சைதன்யா!!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் முன்னணி நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சில மாதங்களுக்கு முன்பு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் அவரவர் பணிகளில் செம பிசியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா விக்ரம் குமார் இயக்கத்தில் தேங்க்யூ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாக சைதன்யா பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்பொழுது சமந்தாவுடனான விவாகரத்து குறித்தும் அவர் மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது, விவாகரத்துக்கு பின் நான் ஒரு மனிதனாக நிறைய மாறியுள்ளேன். ஆரம்பத்தில் என்னால் எதுவும் பேசமுடியவில்லை, ஆனால் தற்போது நான் தயாராக இருக்கிறேன். இப்போதெல்லாம் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நான் உணர்வுபூர்மாக மிகவும் நெருக்கமாக பழகி வருகிறேன். என்னை நான் புது மனிதனாக பார்ப்பதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.