மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாகர்ஜுனாவின் அடுத்த படத்தலைப்பு இதுவா! 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி!
தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆபிஸர். இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சிம்டாங்காரன் என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தில் ஹீரோவாக நாகார்ஜுனா நடித்துள்ளார்.
இப்படத்தை ராம்கோபால் வர்மா தயாரிக்கிறார். மேட்டூர் பா.விஜயராகவன், ரேணுகா மகேந்திரபாபு ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் மே.கோ.உலகேசு குமார் என்பவர் படத்திற்கு வசனம் எழுதி, தமிழாக்கமும் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பையில் தொடர் கொலைகள் நடைபெறுகிறது. அதற்கு காரணம் ஒரு போலீஸ் அதிகாரி என்பது சந்தேகிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளும் அதிகாரியாக நாகார்ஜுனா நியமிக்கப்படுகிறார்.
மேலும் அந்த வில்லன், தனக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பவரின் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார். இறுதியில் என்ன நிகழ்கிறது என்பதே கதை. இப்படத்திற்காக 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜூன் மற்றும் ராம்கோபால் வர்மா இணைந்துள்ளனர் என கூறியுள்ளார்.