சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட நடிகை நக்மா! அதிரடியாக விடுத்த கோரிக்கை!!



nagma-protest-against-priyanga-gandhi-arrest

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனை கண்டித்து நேற்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் புதுச்சேரி மகிளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ராஜீவ் காந்திசிலை நான்குமுனை சந்திப்பின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதற்கு மகளிர் காங்கிரஸ் கட்சியின் தலைவியும், நடிகையுமான நக்மா தலைமை தாங்கினார். அப்பொழுது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உத்திரபிரதேச பாஜக அரசை கண்டித்தும் கோஷமிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

priyanga gandhi

பின்னர் போலீசார் அங்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்மா கூறியதாவது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயிகள் கொலை செய்யப்படுகின்றனர். 

போராட்டத்தில் நடந்த கலவரத்திற்கும், விவசாயிகள் கொலை செய்யப்பட்டதற்கும்  பொறுப்பேற்று முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும். விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார் . அவரை உத்தரபிரதேச அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து கூறியுள்ளார்.