திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என் மனைவியோட ஜோடியாக அந்த ஹீரோதான் சரியா இருப்பாங்க! நமீதா கணவரோட ஆசையை பார்த்தீங்களா!
தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. பின்னர் அவர் அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து தனது கவர்ச்சியால் கவர்ந்துள்ளார்.
மேலும் அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.அதனை தொடர்ந்து நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.
பின்னர் அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காதநிலையில் அவர் கடந்த ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இருவரும் ஜோடியாக சமீபத்தில் பேட்டி அளித்துள்ளனர். அப்பொழுது நமீதாவின் கணவர் வீரேந்திர சௌத்ரி பேசுகையில், நமீதாவுக்கு அஜித், பிரபாஸ் உடன் தான் ஜோடி சரியாக இருக்கும். ஏனெனில் இருவருக்கும்தான் ஸ்கின் கலரும், உயரமும் கரெக்ட்டாக இருக்கும்.
தென்னிந்திய சினிமாக்கள் கடந்த காலங்களை காட்டிலும் தற்போது கொஞ்சம் மாற்றமடைந்து வருகின்றன. இதனால் நமீதாவுக்கு இருக்கும் இமேஜை மாற்றி நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறோம் என கூறியுள்ளார்.