திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அப்போ தற்கொலை செஞ்சுக்க தோணுச்சு! பட்ட அவஸ்தை அவ்வளவு!! சீக்ரெட்டை போட்டுடைத்த நமீதா! செம ஷாக்கில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து அவர் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அவர் பல படங்களில் தனது அளவில்லாத கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் எடை அதிகரித்தால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நமீதா தனது காதலர் வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது நமீதா தனது உடல் எடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார். இந்நிலையில் உடல் எடை கூடிய மற்றும் குறைந்த புகைப்படங்களை இணைத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நமீதா தனது மன அழுத்தங்கள் குறித்தும், அதிலிருந்து மீண்டது குறித்தும் கூறியுள்ளார்.
அந்த பதிவில் அவர், உடல் எடை அதிகரித்தபோது எனக்கு அதிக மன அழுத்தமும் ஏற்பட்டது. யாருடனும் பழக முடியவில்லை. இரவில் தூக்கம் வரவில்லை. அதிகம் சாப்பிட்டேன். எனது எடை 97 கிலோவாக இருந்தது. நான் மதுவுக்கு அடிமையானதாக பலரும் கூடினர். ஆனால் தைராய்டு பிரச்சினை இருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும். அப்பொழுது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமெல்லாம் வந்தது.
பின்னர் ஐந்தரை வருடத்திற்கு பிறகு, எனது கிருஷ்ணரையும், மகா மந்திராஸ் தியானத்தையும் நான் கண்டறிந்தேன். சிகிச்சைக்காக மருத்துவரிடமெல்லாம் செல்லவில்லை. கடைசியாக அமைதியையும், அன்பையும் கண்டுபிடித்தேன்.இந்த பதிவின் நீதி நீங்கள் வெளியில் தேடுவது உங்களுக்குள்ளேயே இருக்கும் என்பதுதான் என குறிப்பிட்டுள்ளார்.