திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடுக்காட்டில் அந்தரத்தில் தொங்கிய நடிகை நமிதா.! புகைப்படத்தைக் கண்டு பதறிப்போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பிரபலமானவர் நடிகை நமிதா. அதனை தொடர்ந்து அவர் விஜய் அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
எனது அளவில்லாத கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட அவருக்கு நாளடைவில் உடல் எடை அதிகரித்த நிலையில் பட வாய்ப்புகள் குறையத் துவங்கியது. இந்தநிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் தனது காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது உடல் எடை குறைந்த அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது பவ் பவ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் காட்சிக்காக அவர் நடுக்காட்டில் உடம்பு முழுவதும் பெல்ட் மாட்டி அந்தரத்தில் தொங்கியுள்ளார். அத்தகைய புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்திற்காக அவர் ஏற்கனவே கிணற்றில் விழுந்துள்ளார்.