மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளை வெளியாகிறது நந்திவர்மன் படத்தின் டிரைலர்: அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஏகே பிலிம் பேக்டரி தயாரிப்பில், ஜிவி பெருமாள் வரதன் இயக்கத்தில், சுரேஷ் ரவி உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நந்தி வர்மன்.
படத்தில் சுரேஷ் ரவியுடன், ஆஷா கௌடா, நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், ஜெஎஸ்கே கோபி, முல்லை கோதண்டம் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
மதன் கார்த்திக் வரிகளில் உருவான பாடல்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சோழர்களின் வரலாற்றை தொடர்ந்து, பல்லவ மன்னரின் வரலாற்றை எளிமையாக இக்காலத்துடன் தொடர்புபடுத்தி கூறும் திரைப்படமாக நந்திவர்மன் அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் டிரைலர் காட்சிகள் நாளை முதல் வெளியாகின்றன. இந்த அறிவிப்பை படக்குழு உறுதி செய்துள்ளது.