பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
செம தில்லுதான்! படத்திற்காக அட்டகத்தி நந்திதா செய்த காரியத்தை பார்த்தீர்களா.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!
தமிழ்சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற அட்டகத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதனை தொடர்ந்து அவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,
இடம் பொருள் ஏவல், நலனும் நந்தினியும், தேவி2 போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் புலி படத்தில் விஜய்க்கு மனைவியாகவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் தற்போது ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் உருவாகும் திகில் கலந்த ஆக்சன் திரைப்படமான ஐபிசி 376 என்ற படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்காக நந்திதா சண்டை பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் நான்கு பயங்கரமான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில் நந்திதா முழுவதும் டூப் இல்லாமல் அவரே துணிச்சலுடன் பயங்கரமாக சண்டை போட்டுள்ளார் இது குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் மிகவும் ஆச்சரியத்துடன் பாராட்டி தள்ளியுள்ளார்.