திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய்யின் தளபதி 63 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்! யார் தெரியுமா? இதோ!
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் தளபதி விஜய். முதல் இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தளபதி 63 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சென்னை, பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடத்தப்பட்ட படபிடிப்பில், நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் இணைந்து, நடிகர் விஜய் நடனமாடி நடித்த, ஒரு பாடல் படமாக்கப்பட்டது.
இதனையடுத்து நயன்தாராவுடனான, காதல் காட்சிகள் எடுக்கப்படவிருக்கின்றன. இதனால், விரைவில் இந்தப் பட சூட்டிங்கில் நடிகை நயன்தாரா ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முப்பு செய்திகள் வந்தன. இதனை அடுத்து பிரபல அரசியல்வாதி ஒருவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் வேறு யாரும் இல்லை. நாஞ்சில் சம்பத் அவர்கள்தான். ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் எல்.கே.ஜி., படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில், பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு" படத்தில் நடித்து வருகிறார்.
இதனை அடுத்து தளபதி 63 படத்தில் நடிக்க நாஞ்சில் சம்பத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், விரைவில் அதற்கான அறிவுப்பு வெளியாகும் எனவும் அறிவுக்கப்பட்டுள்ளது.