மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய் தீக்குளிப்பு! வயிறு குலுங்க அனைவரையும் சிரிக்க வைக்கும் நாஞ்சில் விஜயன் வாழ்வில் இப்படியொரு சோகமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி சிரிச்சா போச்சு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்ற இந்த நிகழ்ச்சியில் பெரும் கஷ்டத்தில் இருப்பவர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் நாஞ்சில் விஜயன். மேலும் இவர் பெருமளவில் பெண் வேடமிட்டு காமெடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். ஆனால் அனைவரையும் பெருமளவில் சிரிக்கவைத்த அவரது வாழ்வு பெரும் சோகம் நிறைந்தது.
நாகர்கோவிலை சேர்ந்தவர். இவர் சிறுவயதிலேயே ஏராளமான கஷ்டங்களை அனுபவித்துள்ளார். விஜயனின் அப்பா குடிபழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இந்நிலையில் மன வேதனையில் இருந்த அவரது அம்மா பிள்ளைகளின் கண்முன்னே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அவரது தந்தையும் அவர்களை தனியாக விட்டுச் சென்றுவிட்டார். பின்னர் விஜயனின் பாட்டியே அவர்களை வளர்ந்து வந்துள்ளார்.
மேலும் படிப்பில் கில்லாடியான அவர் கல்லூரி படிப்பிற்கு பின் என்ன செய்வது என தெரியாமல் மிகவும் அவதிப்பட்ட நிலையிலேயே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் நாளில் கலந்துகொண்டார். ஆனால் அவர் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார் இருப்பினும் தன்னம்பிக்கையோடு தளரவிடாமல் முயற்சி செய்த நிலையில் தற்போது இந நிலையை அடைந்துள்ளார். மேலும் ஏராளமான பெண் வேடம் போட்டு நடித்து வந்த அவருக்கு தற்போது திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர் பெண்வேடம் போடுவதை தவிர்த்து வருவதாக கூறபடுகிறது.