#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நந்தினி சீரியல் கங்காவுக்கு இவ்வளவு அழகான தங்கையா! முதல் முறை வெளியான புகைப்படம்.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரில் கங்கா என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நித்யா ராம். கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட இவர் ஒருசில கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
மேலும், கன்னடம், தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் நித்யா ராம். சுந்தர். சி தயாரிப்பில் தமிழ் ஒளிபரப்பான நந்தினி தொடர் இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
நந்தினி தொடர் முடிவடைந்த நிலையில் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துவருகிறார் நித்யா ராம். இந்நிலையில் முதல் முறையாக இவரது சகோதரி குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
நந்தினி கங்காவுக்கு ரட்சிதா ராம் என்ற சகோதரி உள்ளார். இதுவரை 20கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார் ரட்சிதா. மேலும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் ரட்சிதா.
இதுவரை தமிழ் பக்கம் தலைகாட்டாத இவரது புகைப்படம் தற்போது தமிழ் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. இதோ அவரது புகைப்படம்.