மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுஷாந்த் சிங் வழக்கில் திடீர் திருப்பம்! ரியா மீது போதைப்பொருள் தடுப்புப்பிரிவு வழக்கு!
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இத்தகைய விபரீத முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுஷாந்த் மரணத்தில் பெரும் மர்மம் இருப்பதாகவும், சிபிஐ விசாரணை தேவை எனவும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. ரியா மீது போதைப் பொருள் தடுப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தநிலையில் சுஷாந்த் சிங்குடன் இணைந்து வசித்துவந்த நடிகை ரியா சக்ரவர்த்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் ரியா, போதைப் பொருள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவரா? என்பது பற்றியும் விசாரிக்கப்படும் என போதைப் பொருள் தடுப்பு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.