திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நாட்டாமை பட டீச்சரின் தற்போதைய நிலைமையை பாத்தீங்களா.. வைரலாகும் புகைப்படம்..
நாட்டாமை படம் மூலம் பிரபாலமான நடிகை ராணியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
90ஸ் கிட்ஸ்கள் கவர்ச்சி காட்டி பேமஸாய் பார்த்த நடிகை என்றால் நாட்டாமை படத்தில் வரும் டீச்சர் கேரக்டர் தான். இவரது பெயர் ராணி. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர், சினிமா பட தயாரிப்பாளராக விரும்பி சினிமாவிற்கு வந்த நிலையில், நாட்டாமை பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த படத்தில் டீச்சராக நடித்தார்.
அவரது நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து ஜெமினி படத்தில் ஓ போடு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். தற்போது ஒருசில தெலுங்கு படங்களில் நடித்துவரும் இவர், சினிமா தவிர குடும்ப வாழ்க்கையில் பயங்கர பிசியாக உள்ளார். இவருக்கு தற்போது கல்லூரி படிக்கும் ஒரு மகள் உள்ளார்.