மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அழகு தேவதையாக மாறிய நாயகி சீரியல் ஆனந்தி! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நாயகி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்துவருபவர் வித்யா பிரதீப். சைவம், பசங்க 2 , மாரி 2 , தடம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வித்யா பிரதீப். நடிகை என்பதையும் தாண்டி இவர் ஒரு வளர்ந்துவரும் இளம் விஞானியும் கூட.
ஒருசில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் தாவிய இவர் நாயகி தொடரில் கதாநாயகியாக நடித்துவருகிறார். சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் 500 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆடை வடிவமைப்பு ஷோ ஒன்றில் ஏஞ்சல் போல் வெள்ளை நிற உடை அணிந்து இவர் நடந்துவரும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.