#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சும்மா மிரளவைக்குதே.! நயன்தாராவின் அடுத்த படம் குறித்து வெளிவந்த அசத்தலான அப்டேட்! அட...என்னனு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் நயன்தாரா இறுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் கோல்ட், லயன், காட்ஃபாதர் மற்றும் கனெக்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் நயன்தாரா நடிப்பில் O2 என்ற படமும் உருவாகி வருகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.கே. விக்னேஷ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் சார்பில் எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கின்றார். 02 படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் வீடியோவை ஹாட் ஸ்டார் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அது வைரலாகி வருகிறது.
Here’s the Title Reveal of #O2 Movie.#O2onHotstar #Nayanthara @prabhu_sr #Ritvick #GSViknesh #Thamizh #VishalChandrasekar @disneyplusHSTam https://t.co/cXw5CGwtkU
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 6, 2022