#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மெகா டுவிஸ்ட்.! இதை எதிர்பார்க்கலையே.! வாடகைதாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்- விக்கி ஜோடி.!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் பிரபல நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னைக்கு அருகேயுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவருக்கும் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இருவரும் சூட்டிங், ஹனிமூன் என பிஸியாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த நட்சத்திர ஜோடிக்கு வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதனை கடந்த 9 ஆம் தேதி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பலரும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறினர். மேலும் சர்ச்சைகளும் கிளம்பியது.
இந்த நிலையில் சட்டத்தை சரியான முறையில் பின்பற்றிதான் இருவரும் குழந்தை பெற்றுக் கொண்டனரா? என்ற விவாதம் கிளம்பியது. மேலும் இதுக்குறித்து தீவிரமான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறுவதற்கான ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.