திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா!! நயன்தாராவுக்கு இவ்ளோ சொத்து இருக்கா ?! ரசிகர்களை வாய்பிளக்க வைத்த சொத்து மதிப்பு.!
சரத்குமார் நடித்த "ஐயா" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. "லேடி சூப்பர்ஸ்டார்" என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொத்தம் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான "ஜவான்" திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ள நயன்தாரா, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் நயன்தாரா.
தற்போது இவருக்கு 200கோடி அளவில் சொத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சென்னையில் தனது கணவர் குழந்தைகளுடன் 100 கோடி ருபாய் மதிப்புள்ள பிளாட்டில் வசித்து வருகிறார். மேலும் ஐதராபாத்தில் இரு அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன.
மேலும் பிஎம்டபுள்யு 7 மற்றும் 5 சீரிஸ் கார், மெர்சிடெஸ் ஜிஎல்எஸ் 350டி போன்ற விலையுயர்ந்த கார்கள் உள்ளன. மேலும் இவர் சொந்தமாக ஜெட் விமானம் ஒன்றை வைத்துள்ளார். ஷில்பா ஷெட்டி, ப்ரியங்கா சோப்ரா, மாதுரி தீட்ஷித் ஆகியோருக்கு அடுத்ததாக நயன்தாராவிடம் தான் ஜெட் விமானம் உள்ளது.