#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இனி அப்படிதான்! திருமணமான சில நாளிலேயே நயன்தாரா போட்ட கண்டிஷன்! என்னனு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. மகாபலிபுரத்தில் பிரபல ரிசார்டில் நடைபெற்ற இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருப்பதி ஏழுமலையான் தரிசனம், செய்தியாளர் சந்திப்பு மற்றும் தற்போது கேரளாவிற்கு மறுவீடு செல்வது என பிஸியாக இருந்து வருகின்றனர். அவர்களது ஜோடி புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
நடிகை நயன்தாரா பாலிவுட்டிலும் ஹீரோயினாக களமிறங்க உள்ளார். இந்நிலையில் திருமணமான நிலையில் அவர் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் புதிய கண்டிஷன் போட்டுள்ளாராம். அதாவது இனி ஹீரோக்களுடன் முத்தக் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. திருமணத்துக்கு பிறகு அனைத்து நடிகைகளும் கூறுவது போலவே நயன்தாராவும் கூறியுள்ளதால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.