#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நயன்தாராக்கு என்ன ஒரு பெரிய மனசு தெரியுமா?
நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இரண்டாம் படத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
2015ம் ஆண்டு தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என பாராட்டி உள்ளன
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. அண்மையில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் வெற்றி படங்களாக அமைந்தன.
தொடர் வெற்றியால் நயன்தாரா சம்பளத்தை உயர்த்தியதாக தகவல் வெளியானது. அதே சமயம் அவர் நயன்தாரா மூலம் நல்ல தகவலும் வந்திருக்கிறது.
இமைக்கா நொடிகள் பட வெளியீட்டின் போது, அப்பட தயாரிப்பாளருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அந்த தருணத்தில் நயன்தாராவுக்கு ரூ. 50 லட்சம் சம்பள பாக்கி நிலுவையில் இருந்திருக்கிறது.
நயன்தாரா நினைத்திருந்தால், படம் வெளியாகும் முன்னரே சம்பளப் பணம் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி இருக்கலாம். ஆனால் தயாரிப்பாளரின் நிலையை எண்ணி பெருந்தன்மையாக தன் சம்பள பணத்தை அப்போது கேட்காமல் விட்டுக் கொடுத்தாராம். இது சினிமா வட்டாரங்களில் நயன்தாராவின் புகழ் பாடும் விஷயமாக அமைந்துள்ளது.