நயன்தாரா, சமந்தாவிற்கு அனுப்பிய அன்பு பரிசு... நெகிழ்ச்சியில் சமந்தா!! அப்படி என்ன பரிசு தெரியுமா.?



 Nayanthara gave her beauty product to Samantha

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் நயன்தாரா அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் தயாரிக்கப்படும் பொருட்கள் மலேசியா, சிங்கப்பூர் என வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

nayantharaஇந்நிலையில் நயன்தாரா தனது நெருங்கிய தோழியான சமந்தாவிற்கு தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சமந்தா தானும் பரிசை காண ஆவலாக இருப்பதாக நெகிழ்ச்சியான பதிலை போட்டுள்ளார்.