#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சொத்து மதிப்பில் டாப் 5 இடத்தை பிடித்த நடிகைகள்.! முதலிடத்தில் இவரா.?! அடேங்கப்பா.!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகியது. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமான நயன்தாரா அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
வாடகை தாய் மூலமாக அவர் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான நிலையில் இந்த வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற சர்ச்சையின் காரணமாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார்.
திருமணத்திற்கு பின்னர் பல நடிகைகள் காணாமல் போயுள்ள நிலையில், இன்னமும் டாப் நடிகைகள் லிஸ்டில் நயன்தாரா முதலிடத்தில் இருக்கிறார். இப்போதும் அவர் படங்களில் நடித்து வருகின்றார். இத்தகைய நிலையில், அதிக சொத்துக்களை வைத்திருக்கும் தென்னிந்திய நடிகைகளின் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
அதன்படி நயன்தாரா ரூ.165 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் இடத்திலும், தமன்னா ரூ.110 கோடி சொத்து மதிப்பில் இரண்டாவது இடத்திலும், அனுஷ்கா ரூ.100 கோடி சொத்து மதிப்பில் மூன்றாவது இடத்திலும், சமந்தா ரூ.89 கோடி சொத்து மதிப்பில் நான்காவது இடத்திலும் நடிகை பூஜா ரூ.50 கோடி சொத்து மதிப்பில் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றார்கள்.