திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜவான் பட வெற்றி, கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா.! எவ்வளவுனு தெரிஞ்சா தலைசுத்தி போயிருவீங்க!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து டாப் நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தமிழ் திரையுலகையே கலக்கி வந்த நடிகை நயன்தாரா அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் அவர் இளவயது ஷாருக்கானுக்கு ஜோடியாக, செம ஸ்டைலாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் ஏராளமான வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் நடிகை நயன்தாராவை பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘பைஜூ பாவ்ரா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ.13 கோடி சம்பளமாக கேட்டுள்ளராம். அதனை கொடுப்பதற்கு படக்குழுவும் தயாராக உள்ளனராம். இதற்கு முன்பு 10 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா ஜவான் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.