திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பரபரப்பு.! நயன்தாராவிற்கு என்ன ஆச்சு.! இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். முதன் முதலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா, தமிழில் 'ஐயா திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார்.
முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிதது திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவர்களுக்கு வாடகை தாய் முறை மூலம் இரு ஆண் குழந்தைகள் உள்ளன. இது போன்ற நிலையில், சமீபத்தில் நயன்தாரா விக்னேஷ் இவனை இன்ஸ்டாகிராமில் அண் ஃபாலோ செய்துவிட்டார் என்ற செய்தி இணையத்தில் வைரலானது.
இதனை அடுத்து தற்போது நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "im lost" என்று பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவை பார்த்து ரசிகர்கள் நயன்தாராவிற்கு என்ன நடந்தது? என்று குழப்பத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நயன்தாரா சமீப காலங்களில் நடித்து வரும் திரைப்படங்கல் தொடர் தோல்வியையே அடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.