நெற்றிக்கண் படம் வெளியாகி சில நிமிடங்களில் நயன்தாராவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!! அதிர்ச்சியில் படக்குழு..



Nayanthara netrikan movie leaked on websites

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் வெளியாகி சில நிமிடங்களில் ஹெச்.டி. தரத்தில் திருட்டு இணையதளத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் மட்டுமில்லாது ஹாலிவுட் சினிமா வரை தியேட்டர்களில் வெளியான படங்களை உடனேயே திருட்டு இணையதளங்களில் வெளியாகிவெளியிடுவது வாடிக்கையாகிவருகிறது. இதனை தடுப்பதற்காக, திரையரங்கிக்குள் செல்லும்போது பார்வையாளர்கள் கேமிராக்களை கொண்டுசெல்ல தடை விதித்துள்ளனர்.

nayanthara

ஆனாலும் படம் திருட்டு இணையத்தளங்களில் வெளியாவது தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் க்ரைம் - த்ரில்லராக உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நேற்று முன்தினம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. நெற்றிக்கண் படம் வெளியாகி சில நிமிடங்களில் ஹெச்.டி. தரத்தில் திருட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.