மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவிகளுக்கு பிரியாணி விருந்து வைத்த நயன்தாரா? காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை ஜி ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்க, லேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கியிருந்தார்.
மேலும் இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய் சுரேஷ் சக்கரவர்த்தி ரெடி சத்யராஜ் கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஐயர் வீட்டு பெண்ணான நயன்தாரா பல தடைகளை கடந்து பிரபல சமையல் கலைஞரானார் என்பது படத்தின் மூலக்கதையாகும்.
இந்த படத்தில் சமையல் மற்றும் பெண் சுதந்திரம் இரண்டையும் மையப்படுத்தி உருவாகி இருப்பதால் பெண் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தனியார் கல்லூரி மாணவிகளுக்கு படக்குழுவினர் பிரியாணி பரிமாறி மகிழ்ந்துள்ளனர்.
Briyani is even more special when Poorni serves it :) #Annapoorani serving now in cinemas near you.
— Nayanthara FC (@AjithTharan) December 3, 2023
Enjoy the feast ❤️#Nayanthara #LadySuperstarNayanthara #annapooraniblockbuster #boxofficeQueen pic.twitter.com/SJcl2avaYn
இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா மற்றும் ஜெய் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு பிரியாணி பரிமாறி அவர்களுடன் கலகலப்பாக உரையாடுகின்றனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.